Archives: ஆகஸ்ட் 2024

தேவனுடைய தட்டில் வைத்துவிடுங்கள்

பல ஆண்டுகளாக, ஒரு தாய் வியாதிப்பட்டிருந்த தனது வாலிப மகளுக்கு மருத்துவ ரீதியாக உதவி, நல்ல ஆலோசனை மற்றும் சிறந்த மருந்துகளைப் பெற்றுத் தந்து, அவளுக்காக ஜெபித்துக் கொண்டுமிருந்தாள். மகளுடைய சரீரத்தின் ஏற்ற தாழ்வான நிலையற்ற தன்மை, அம்மாவின் இதயத்தை  நாளுக்கு நாள் கணமூட்டியது. அடிக்கடி சோகத்தால் சோர்வடைந்து, தனக்கும் பராமரிப்பு வேண்டும் என்பதை உணர்ந்தாள். ஒரு நண்பர் அவளது கவலைகளையும், தன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களையும் சிறிய காகிதத் துண்டுகளில் எழுதி, "தேவனுடைய தட்டில்" வைத்து அவளது படுக்கையில் வைக்குமாறு பரிந்துரைத்தார். இந்த எளிய நடைமுறை அனைத்து மன அழுத்தத்தையும் அகற்றவில்லை, ஆனால் அந்தத் தட்டைப் பார்க்கும்போது அவளுக்கு அந்த கவலைகள் தேவனுடைய தட்டில் இருப்பதை நினைவூட்டுகிறது, அவை அவளுடையது அல்ல.

ஒரு விதத்தில், தாவீதின் பல சங்கீதங்கள் அவனுடைய உபத்திரவங்களைப்  பட்டியலிட்டு, அவற்றை 'தேவனுடைய தட்டில்' வைப்பதற்கான வழியாக இருந்தன (சங்கீதம் 55:1, 16-17). அவரது மகன் அப்சலோமின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியானது இங்கே விவரிக்கப்பட்டிருக்குமானால், தாவீதின் "நெருங்கிய நண்பன்" அகித்தோப்பேலும் உண்மையில் அவருக்குத் துரோகம் செய்து அவரைக் கொல்லும் சதித்திட்டத்தில் ஈடுபட்டான் (2 சாமுவேல் 15-16). எனவே "அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் (தாவீது) கூக்குரலிட்டார்"  தேவன் அவருடைய ஜெபத்தைக் கேட்டார் (சங்கீதம் 55:1-2, 16-17). அவர் "கர்த்தர்மேல் பாரத்தைவைத்துவிட" தெரிந்துகொண்டார் மற்றும் அவரது பராமரிப்பை அனுபவித்தார் (வ. 22).

கவலைகளும் பயங்களும் நம் அனைவரையும் பாதிக்கின்றன என்பதை நாம் உண்மையாக ஒப்புக் கொள்ளலாம். தாவீதைப் போன்ற எண்ணங்கள் நமக்கும் இருக்கலாம்: “ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்” (வ. 6). தேவன் அருகில் இருக்கிறார், சூழ்நிலைகளை மாற்றும் ஆற்றல் உள்ளவர் அவரே. அனைத்தையும் அவரது தட்டில் வையுங்கள்.

நான்கு வார்த்தைகளில் வாழ்க்கை

ஜேம்ஸ் இந்நெல் பேக்கர், ஜே. ஐ. பேக்கர் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். 2020 இல் தனது தொண்ணூற்றுநான்காவது பிறந்தநாளுக்கு ஐந்து நாட்களே இருந்த நிலையில் மரித்தார். அறிஞரும் எழுத்தாளருமான அவருடைய சிறந்த புத்தகமான, நோயிங் காட், வெளியிடப்பட்டு 1.5 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன. வேதாகமத்தின் அதிகாரம் மற்றும் சீடர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் மிகவும் தேர்ச்சிபெற்ற பேக்கர், எல்லா இடங்களிலும் உள்ள கிறிஸ்துவின் விசுவாசிகளை இயேசுவுக்காக வாழ்வதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். அவரது மரண தறுவாயில், சபைக்கான அவரது இறுதி வார்த்தைகளைக் கேட்டனர்; பேக்கருக்கு ஒரு வரி கூறினார், வெறும் நான்கு வார்த்தைகள்: “கிறிஸ்துவை எல்லா வழிகளிலும் மகிமைப்படுத்துங்கள்".

அந்த வார்த்தைகள் அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன, அவரது வியத்தகு மனமாற்றத்திற்குப் பிறகு, அவருக்கு நியமிக்கப்பட்ட பணியை உண்மையுடன் செய்யத் தொடங்கினார் மேலும் அதன் விளைவுகளைத் தேவனிடம் விட்டுவிட்டார். முழு புதிய ஏற்பாட்டிலும் ரோமர் புத்தகத்தில் காணப்படும் பவுலின் வார்த்தைகள் மிகவும் இறையியல் ரீதியாக நிரம்பியவையாகும். மேலும் பேக்கர், அப்போஸ்தலன் எழுதியதை போலவே, "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு" (15:6 ) என்று கிட்டத்தட்ட இவரும் சுருக்கமாகக் கூறுகிறார்.

பவுலின் வாழ்க்கை நமக்கு ஒரு உதாரணம். நாம் பல வழிகளில் தேவனை மகிமைப்படுத்தலாம் (கனப்படுத்தலாம்), அதில் ஒன்று நமக்கு முன் வைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலமும் அதன் முடிவுகளைத் தேவனின் மாறாத கரங்களில் விட்டுவிடுவதும் ஆகும். புத்தகங்களை எழுதுவதோ அல்லது மிஷனரிகளாக செல்வதோ அல்லது சிறுவர்களுக்குப் பாடம் கற்பிப்பதோ அல்லது வயதான பெற்றோரைப் பராமரிப்பதோ, எதுவாயினும் ஒரே நோக்கம்: கிறிஸ்துவை எல்லா வழிகளிலும் மகிமைப்படுத்துங்கள்.  நாம் ஜெபித்து, வேதத்தை வாசிக்கும்போது அர்ப்பணிப்புள்ள கீழ்ப்படிதலுடன் வாழவும், நாம் சொல்கிற, செய்கிற எல்லாவற்றிலும் இயேசுவைக் கனம்பண்ணும் வகையில் நம்முடைய அன்றாட வாழ்க்கையைத் தொடர தேவன் நமக்கு உதவுகிறார்.

பிறர் மீதுண்டாக்கும் தாக்கம்

எங்கள் பள்ளிக் காப்பாளரான பென்ஜி எங்களோடு மதிய உணவு சாப்பிட  வருவதற்குத் தாமதமாகும் என்றறிந்த எனது இறையியல் பேராசிரியரான டாக்டர் லீ, ​​அவர் அமைதியாக அவருக்காக ஒரு தட்டில் உணவை எடுத்து வைத்தார். நானும் எனது வகுப்புத் தோழர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது, ​​டாக்டர் லீ அவருக்காக ஒரு தட்டில் அரிசிச் சாதத்தின் கடைசி பிடியையும் அமைதியாக எடுத்து வைத்தார், அதன்மீது சிறிது துருவிய தேங்காயைச் சுவையான சட்டினியாகச் சேர்த்தார். ஒரு சிறந்த இறையியலாளர் ஒருவரின் பல அன்பான செயல்களில் இதுவும் ஒன்று, மேலும் டாக்டர் லீ தேவன் மீது கொண்டிருந்த உண்மைத்தன்மை என் ஆசிரியர் என்மீது ஏற்படுத்திய தாக்கமும், காயுவும் தனது காலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், நாம் மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கான ஆற்றல் வாய்ந்த நினைவூட்டல்கள், இதனைப் பயன்படுத்தி தேவன் பிறரை கிறிஸ்துவிடமாய் திருப்பலாம். நாம் தேவனுடன் உண்மையாக நடக்கும்போது, ​​பிற விசுவாசிகளும் அவருடன் உண்மையாக நடக்க உதவும் வகையில் வாழ்வோம், செயல்படுவோம். வழிந்தோடுவதாகவே இதனை நான் கருதுகிறேன். இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் என் மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கம் அப்படியே இருக்கிறது.

அப்போஸ்தலன் யோவானுக்கும் ஒரு அன்பான நண்பர் இருந்தார், அவர் பல விசுவாசிகளின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். தேவனுக்கும் வேதவாக்கியங்களுக்கும் உண்மையுள்ளவர், தொடர்ந்து “சத்தியத்தின்படி” (3 யோவான் 1:3) நடப்பவர் என்று அவர்கள் காயுவை குறித்தே பேசினர். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் அந்நியரான பிரசங்கிகள் அரதேசிகளாய் இருந்தாலும் அவர்களை காயு உபசரித்தார் (வ.5). இதன் விளைவாக, யோவான் அவரிடம், "அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சிசொன்னார்கள்" (வ. 6) என்றார். தேவன்மீதும் இயேசுவின் மற்ற விசுவாசிகள் மீதுமான காயுவின் உண்மைத்தன்மை, நற்செய்தியை மேலும் பரவிட உதவியது.

என் ஆசிரியர் என்மீது ஏற்படுத்திய தாக்கமும், காயுவும் அவரது காலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், நாம் மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கான ஆற்றல் வாய்ந்த அடையாளங்கள். நாம் தேவனுடன் உண்மையாக நடக்கையில், ​​பிற விசுவாசிகளும் அவருடன் உண்மையாக நடக்க உதவும் வகையில் வாழ்வோம், செயல்படுவோம்.

காட்டிலுள்ள இருட்டறை

இராணுவத்தில் டோனி வக்காரோவுக்கு புகைப்படக் கலைஞராக வாய்ப்பு கிடைக்கவில்லை,  ஆயினும் அது அவருக்குத் தடையில்லை. பீரங்கி குண்டுகளும் வெடிகளும் மரங்களிலிருந்து மழை பொழிவது போல் தோன்றும் திகிலூட்டும் தருணங்களுக்கு இடையில், அவர் எப்படியாயினும் படங்களை எடுத்தார். பின்னர், அவரது நண்பர்கள் தூங்கும்போது, ​​​​அவர்களது தலைக்கவசங்களைப் பயன்படுத்தி ரசாயனங்களைக் கலந்து தனது நிழற்படங்களை உருவாக்கினார். இரவு நேரக் காடு நிழற்படத்துக்குரிய இருட்டறையாக மாறியது, அதில் வக்காரோ இரண்டாம் உலகப் போரின் பொது ஹர்ட்ஜென் வனப் போரின் காலத்தைக் கடந்திருக்கும் நினைவுகளை உருவாக்கினார்.

தாவீது ராஜாவும்  தனது பங்குக்கு யுத்தங்களிலும், இருட்டான நேரங்களிலும்  வாழ்ந்தார். இரண்டு சாமுவேல் 22 கூறுகிறது, "கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது" (வ.1). தாவீது அந்த அனுபவங்களைப் பயன்படுத்தி தேவனுடைய உண்மைத்தன்மையைப் பதிவு செய்தார். அவர், “மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது” (வ.5) என்றார்.

தாவீது விரைவிலேயே விரக்தியிலிருந்து நம்பிக்கையை நோக்கி நகர்ந்தார்: "எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்” (வ.7) என்று நினைவுபடுத்திக்கொண்டார். தாவீது தேவனின் தவறாத உதவிக்காக அவரைப் புகழ்வதை உறுதிப்படுத்திக்கொண்டார். "கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர். உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒருமதிலைத் தாண்டுவேன்” (வ.29-30) என்றார்.

தாவீது, உலகிற்குத் தனது உண்மையுள்ள தேவனைப் பற்றிச் சொல்லத் தனது கஷ்டங்களை ஒரு வாய்ப்பாக மாற்றினார். நாமும் அதையே செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இருளை ஒளியாக மாற்றும் ஒருவரை நாம் சார்ந்துள்ளோம்.